பேஸ்லைன் வீதியில் மரம் முறிந்து விழுந்து ஒருவர் பலி!!

503

1 (40)நேற்று மாலை கொழும்பு பேஸ்லைன் வீதியில், வெலிக்கடை சிறைச்சாலைக்கு அருகில் மரம் ஒன்று முறிந்து விழுந்ததில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

கடும் மழை காரணமாக அந்தப் பகுதியில் சென்று கொண்டிருந்த முச்சக்கர வண்டி ஒன்று மற்றும் மோட்டார் சைக்கிள் ஒன்றின் மீது மரம் ஒன்று முறிந்து விழுந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இதன்காரணமாக படுகாயமடைந்த நிலையில் மோட்டார் சைக்கிளில் பயணித்தவரை கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதித்ததாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவித்தது.

எனினும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட குறித்த நபர் உயிரிழந்துவிட்டதாக வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன.