வவுனியா நகரசபை மைதானத்தினை இராணுவத்தினரின் புதிய நிர்மாண கண்காட்சி நிகழ்விற்கு அனுமதித்ததை எதிர்த்து இன்று காலை நகர சபை மைதானத்திற்குள் வவுனியா மாவட்ட விளையாட்டுக்கழகங்கள், பொது அமைப்புக்கள், மாணவர்கள் என பலரும் இணைந்து கவனயீர்ப்புப் போராட்டத்தினை நடாத்தியிருந்தனர்.
இவர்களுக்கு ஆதரவாக வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள், வடமாகாண சுகாதார அமைச்சர், வடமாகாண சபை உறுப்பினர்கள் என பலரும் இக்கவனயீர்ப்புப் போராட்டத்தில் இணைந்து கொண்டனர்.
அத்துடன் துடுப்பாட்ட சங்கம், மெய்வல்லுநர் சங்கம், உதைபந்தாட்டச்சங்கம் என அனைத்து விளையாட்டு கழகங்களின் பிரதிநிதிகளும் இணைந்திருந்தனர்.
குறிப்பாக மழை காலத்தில் இராணுவத்தினரின் பாவனைக்கு நகர சபை செயலாளர் அனுமதியளித்தது, மைதானத்திற்குள் இராணுவ கனரக வாகனங்களை அனுமதித்தது, இது அனைத்தும் விளையாட்டு வீரர்களுக்கு தடையாக இருப்பதுடன், இதனை திரும்பவும் புணரமைப்பு செய்யவேண்டிய நிலைக்கு கொண்டு சென்றுள்ளதையும் சுட்டிக்காட்டியே இந்த கவனயிர்ப்புப் போராட்டத்தினை விளையாட்டுக் ஏற்பாடு செய்திருந்தனர்கள்.
நகரசபை செயலாளர் மற்றும் வடமாகாண முதலமைச்சர் ஆகியோருக்கு மகஜர் வவுனியா விளையாட்டுக்கழகங்களால் அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.






