வடமாகாண பாடசாலைகளுக்கு நாளை சிறப்பு விடுமுறை!!

812

School

வடக்கு மாகாண பாடசாலைகளுக்கு நாளை சிறப்பு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளதாக வடமாகாணசபையின் கல்வி அமைச்சர் த.குருகுலராஜா அறிவித்துள்ளார்.

இன்று காலை தமிழ் அரசியல் கைதிகளை விடுதலை செய்யுமாறு கோரி புகையிரதத்தின் முன் பாய்ந்து தற்கொடை செய்து கொண்ட மாணவன் தியாகி செந்தூரனை நினைவு கூரும் வகையிலும் அவரது தற்கொடை காரணமாக ஏற்படக்கூடிய நிலமைகளை தவிர்க்கும் பொருட்டும் இவ் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

மாணவர்கள் பெற்றோருடன் வீடுகளில் தங்கி இருக்குமாறு கேட்டுள்ளார்.