மாணவியை கூட்டாக பலாத்காரம் செய்து வீடியோ எடுத்து மிரட்டிய சக மாணவர்கள்!!

429

16332744660xnfdj67மும்பையில் சக வகுப்பு மாணவியை கூட்டாக பலாத்காரம் செய்து, அந்தக் காட்சியை வீடியோ எடுத்து மாணவியை மிரட்டி வந்த மாணவர்கள் 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கடந்த 21ம் திகதி சக மாணவரின் வீட்டுக்கு பாடத்தில் உள்ள சந்தேகங்களை தீர்ப்பதாக சென்ற போது இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

இதனையடுத்து பாதிக்கப்பட்ட மாணவி சம்பவம் தொடர்பில் பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளார். அதன்போது அவருடன் மேலும் 3 பேர் வீட்டில் இருந்ததாகவும், பின்னர் 4 பேரும் சேர்ந்து தன்னை பாலியல் பலாத்காரம் செய்ததாகவும் பாதிக்கப்பட்ட மாணவி பொலிஸ் முறைப்பாட்டில் குறிப்பிட்டுள்ளார்.

நடந்த சம்பவம் தொடர்பில் யாரிடமாவது கூறினால் வீடியோவை வெளியிடுவதாக மாணவி மிரட்டப்பட்டதால் நடந்த விபரீதத்தை மாணவி யாரிடமும் கூறியிருக்கவில்லை. கைதான 4 மாணவர்களும் 15 வயதுடையவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

சம்பவம் தொடர்பான விசாரணைகள் தொடர்ந்து முன்னெடுக்கப்படுகின்றன.