இருமுறை மண்ணைக் கவ்விய இங்கிலாந்து இளவரசர்!! (வீடியோ)

430

prince-harry-today-150619-tease_2_4c278e1704e9e75d0bb9637a84760a3aதென்னாபிரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து இளவரசர் ஹரி, அந்நாட்டின் தலை நகரான கேப் டவுனில் தொண்டு நிறுவனம் ஒன்று நடத்திய போலோ எனப்படும் குதிரை மீது சவாரி செய்தபடி விளையாடப்படும் விளையாட்டில் கலந்து கொண்டார்.

போட்டியின் போது, எதிர்பாராத விதமாக அவர் குதிரையிலிருந்து கீழே விழுந்து அவசரமாக மீண்டெழுந்தார். அப்போது கூட்டத்தில் ஆங்காங்கே மெல்லிய சிரிப்பு சத்தம் கேட்டது.

ஆனால், மீண்டும் குதிரை மீதேறிய ஹரி திரும்பவும் கீழே விழுந்ததும், கூட்டத்தில் சிரிப்பு சத்தம் சற்று பலமாகவே கேட்டது.

இந்நிலையில், இளவரசர் குதிரையிலிருந்து கீழே விழுந்திருப்பது சமூக ஊடகங்களில் வைரலாகப் பரவி வருகிறது. சில பிரிட்டன் வாசிகள் இம்சை அரசன் பட ஸ்டைலில், குதிரை கூட ஓட்டத் தெரியவில்லை நீரெல்லாம் ஒரு இளவரசர் என்று கமெண்ட் செய்தும் வருகின்றனர்.