டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடியுடன் செல்ஃபி எடுத்துக்கொள்ள பத்திரிகையாளர்கள் அலைமோதியதால் பரபரப்பு ஏற்பட்டது. டெல்லியில் பாஜக தலைமையகத்தில் தீபாவளிக் கொண்டாட்ட நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
இந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்ள பத்திரிகையாளர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், நிகழ்ச்சி முடிந்து மேடையில் இருந்து கீழே இறங்கிச் சென்ற பிரதமர் நரேந்திர மோடி அங்கு இருந்த பத்திரிகையாளர்களிடம் கைகுலுக்கி பேசினார்.
அப்போது பத்திரிகையாளர்கள் பிரதமருடன் செல்பி எடுக்க விருப்பம் தெரிவித்தனர். அவரும் அதை ஏற்றுக்கொண்டார். இதனால், பலரும் பிரதமர் மோடியுடன் செல்பி எடுத்துக் கொள்ள முண்டியடித்தனர். இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
கடந்த ஆண்டும் தீபாவளி மிலன் நிகழ்ச்சியின்போது பத்திரிகையாளர்கள் மோடியுடன் புகைப்படம் எடுக்க போட்டிபோட்டு பரபரப்பை ஏற்படுத்தினர் என்பது குறிப்பிடத்தக்கது.
முன்னதாக நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் மோடி, நாம் கொண்டாடும் திருவிழாக்கள் சமூகத்திற்கு முக்கியத்தும் வாய்ந்தது என்றும் சமூகத்தை பலமாக்கவும், உதவும் என தெரிவித்தார்.