இலங்கை தமிழர் முகாமில் மர்ம காய்ச்சலுக்கு பெண் பலி!!

415

1 (40)இந்தியாவின் தம்மம்பட்டி அருகே, நாகியம்பட்டியில் உள்ள இலங்கை தமிழர் முகாமில் வசித்து வந்த பெண், மர்ம காய்ச்சலால் உயிரிழந்துள்ளார்.

சேலம் மாவட்டம், தம்மம்பட்டி அருகே, நாகியம்பட்டி கிராமத்தில், இலங்கை தமிழர் முகாம் உள்ளது. முகாமில், சாந்தகுமாரி (48 வயது) என்பவர் வசித்து வந்தார். இவரது கணவர் ராஜாமணி ஏற்கனவே இறந்து விட்ட நிலையில், தன் ஏழு குழந்தைகளையும் கவனித்து வந்தார்.

கடந்த மூன்று நாட்களுக்கு முன், சாந்தகுமாரிக்கு காய்ச்சல் ஏற்பட்டதால், தம்மம்பட்டி ஆரம்ப சுகாதார நிலையத்தில், சிகிச்சை பெற்று, மேல்சிகிச்சைக்காக, ஆத்தூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

இந்தநிலையில் நேற்று, காலை சிகிச்சை பலனின்றி சாந்தகுமாரி உயிரிழந்தார் என, தமிழக ஊடகமான தினமலர் செய்தி வௌியிட்டுள்ளது.