’’உங்கள் அருகில் நான் மிகவும் முதியவராக உணர்கிறேன்”: கனடிய பிரதமரை புகழ்ந்த பிரித்தானிய மகாராணி!!

507

1 (45)கனடிய பிரதமரான ஜஸ்டின் ட்ரூடோ அருகில் நிற்கும்போது தான் மிகவும் வயதானவராக உணர்கிறேன் என பிரித்தானிய மகாராணி நகைச்சுவையாக டுவிட்டரில் வெளியிட்ட தகவல் வைரலாக பரவி வருகிறது. ஐரோப்பிய நாடுகளில் ஒன்றான மால்டாவில் நடைபெற்ற பொதுநலவாய நாடுகளின் மாநாட்டில் கனடிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவும், பிரித்தானிய மகாராணியான இரண்டாம் எலிசபெத்தும் பங்கேற்றுள்ளனர்.

நேற்று இரவு விருந்து நிகழ்ச்சியில் இருவரும் நேருக்கு நேராக சந்தித்து தங்களது இருநாடுகளின் உறவுகள் குறித்து பேசியுள்ளனர். அப்போது, மகாராணியாக முடிசூட்டிய நாளிலிருந்து தன்னையே அற்பணித்து சுயநலமற்ற சேவையை மக்களுக்காக செய்து வருகிறார் என பிரித்தானிய மகாராணியை பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ புகழ்ந்துள்ளார்.

பிரதமரின் கருத்துக்கு மகாராணி நன்றி தெரிவித்த அதே நாள் இரவு வேளையில், சமூக வளைத்தளமான டுவிட்டரில் மகாராணி பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், ‘கனடிய பிரதமரே, உங்கள் வாழ்த்துக்கு நன்றி. உங்கள் அருகில் நான் நிற்கும்போது மிகவும் வயதானவராக உணர்கிறேன்’ என புகழ்ந்து தள்ளியுள்ளார்.

மகாராணியின் இந்த கருத்துக்கு கனடிய பிரதமரும் உடனடியாக பதில் கருத்து அனுப்பியுள்ளார். அதில், ‘ஆனால், இதற்கு எதிர்மறையாக, நீங்கள் என்றென்றும் இளமையாகவே இருக்கிறீர்கள். உங்களுடன் இரவு விருந்து நிகழ்ச்சியில் பங்கேற்றது எனக்கு கிடைத்த கெளரவம்’ என மகாராணியை புகழ்ந்துள்ளார்.

கனடிய பிரதமரும், பிரித்தானிய மகாராணியும் வெளியிட்ட இந்த டுவிட்டர் பதிவுகள் ஆயிரக்கணக்கான நபர்களால் வைரலாக பகிரப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.