Dropbox தரும் புதிய வசதி!!

465

Dropboxஒன்லைன் சேமிப்பு வசதியினை வழங்கிவரும் Dropbox ஆனது IOS சாதனங்களுக்காக Adobe நிறுவனத்துடன் இணைந்து ஒன்லைன் ஊடாக நேரடியாக PDF கோப்புக்களை எடிட் செய்யும் வசதியினை அறிமுகம் செய்துள்ளது.

இதற்காக கடந்த ஒக்டோபர் மாதம் முதல் Adobe நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்துள்ளது. இவ் வசதியினை அப்பிளின் iTunes App Store தளத்திலிருந்து Dropbox அப்பிளிக்கேஷனை தரவிறக்கம் செய்து நிறுவுவதன் மூலம் பெற்றுக் கொள்ள முடியும்.
இதனைத் தொடர்ந்து என்ரோயிட் சாதனங்களுக்காகவும் குறித்த அப்பிளிக்கேஷன் விரைவில் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.