மலையேரச் சென்ற பல்கலை மாணவர்கள் மூவர் கீழே விழுந்து காயம்!!

544

Workplace-Injuryநமுணுகுல மலையில் ஏறச் சென்ற வேளை விபத்துக்குள்ளான பல்கலைக்கழக மாணவர்கள் மூவர் பதுளை பொலிஸார் மற்றும் பிரதேச மக்களால் காப்பாற்றப்பட்டுள்ளனர். ஜெயவர்த்தனபுர, சப்ரகமுவ மற்றும் ஊவா வெல்லஸ்ஸ ஆகிய பல்கலைக்கழகங்களைச் சேர்ந்த 11 மாணவர்கள் உள்ளிட்ட 12 பேர் நேற்று மலையேறச் சென்றுள்ளதாக தெரியவந்துள்ளது.

இந்தநிலையில் இவர்களில் மூவர் மலையில் இருந்து விழுந்துள்ளதாக நள்ளிரவு பொலிஸாருக்கு முறையிடப்பட்டுள்ளது.மேலும் பொலிஸார் மற்றும் பிரதேசவாசிகள் இணைந்து காயமடைந்த மாணவர்களை மீட்டு பதுளை வைத்தியசாலையில் அனுமதித்துள்ளதாக பொலிஸார் கூறியுள்ளனர்.

குறித்த பிரதேசத்தில் நிலவிய அதிக பணி மூட்டமே விபத்துக்குக் காரணம் என தெரியவந்துள்ளது.