இந்தியாவில் நடைபெற்றுவரும் ரஞ்சி கிண்ண கிரிக்கெட் தொடரில், பஞ்சாப் மற்றும் தமிழக அணிகள் இதில் மோதிய போட்டியில் அதில் கடமையாற்றிய நடுவர் காயமடைந்து சிகிச்சை பெற்று வருகிறார். இந்தப்போட்டியில் முதலில் விளையாடிய பஞ்சாப் அணி யின் பரிந்தரன்சிங் சரண் துடுப்பெடுத்தாடிக் கொண்டிருக்க, தமிழக வீரர் சந்திரசேகர் பந்துவீசினார்.
இந்த பந்தை பரிந்தரன்சிங் சரண் அடித்த போது அது வேகமாக சென்று அவுஸ்திரேலிய நடுவர் ஜோன்வோர்ட்டின் இடது காதுக்கு பின்னால் சென்று தலையில் தாக்கியது. இதில் அவர் மைதானத்திலேயே சுருண்டு விழுந்து மயக்கமடைந்தார்.
உடனடியாக மருத்துவ குழுவினர் அவருக்கு முதலுதவி சிகிச்சை அளித்தனர். பின்னர் அவசர ஊர்தி மூலம் தனியார் வைத்தியசாலையில் சிகிச்சை அளிக்கப்பட்டது. ஸ்கேன் செய்து பார்த்த போது அவரது தலையில் ரத்தக்கட்டி ஏற்பட்டு இருந்தது தெரிய வந்தது.மயக்க நிலையில் இருந்து தெளிந்த அவர் தற்போது மேலதிக சிகிச்சைக்காக மதுரை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு அவருக்கு தொடர்ந்து தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.





