இன்று விமானப் போக்குவரத்து தாமதம்!!

498

SL

கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் விமான சேவையில் இன்று தாமத நிலை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

குடிவரவு மற்றும் குடியகழ்வு திணைக்களத்தின் கணினி வலையமைப்பில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு காரணமாகவே இந்த நிலை ஏற்பட்டுள்ளதாக எமது விமானநிலைய செய்தியாளர் குறிப்பிட்டார்.

இன்று காலை 6.10 மணி முதல் சுமார் 45 நிமிட நேரம் கணினி வலையமைப்பு செயலிழந்திருந்ததாக தெரியவந்துள்ளது.

எவ்வாறாயினும் தற்பொழுது அந்த நிலை சரிப்படுத்தப்பட்டுவிட்டதாகவும், எனினும் விமான போக்குவரத்தில் சிறிது தாமத நிலை ஏற்பட்டுள்ளதாகவும் தெரியவந்துள்ளது.