அரசாங்க வங்கிக் கட்டடத்தில் தீ!!

574

1538564599 (1)

கட்டுநாயக்க – எவ்ரியவத்தை பிரதேசத்திலுள்ள அரசாங்க வங்கிக் கட்டடம் ஒன்றில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. அத்துடன் தீயால் பணத்துக்கு எந்தவொரு பாதிப்பும் ஏற்படவில்லை எனக் கூறிய பொலிஸார், வங்கியில் இருந்த சில ஆவணங்கள் தீக்கிரையாகியுள்ளதாகவும் சுட்டிக்காட்டியுள்ளனர்.

மேலும் கட்டுநாயக்க விமான நிலைய மற்றும் சீதுவ நகர சபை தீணணைப்பு பிரிவினர் இணைந்து தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரும் நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளனர்.

இதேவேளை தீ விபத்துக்கான காரணம் இதுவரை தெரியவரவில்லை. சம்பவம் குறித்த மேலதிக விசாரணைகளை கட்டுநாயக்க பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.