இலங்கை இளைஞன் இத்தாலியில் உயிரிழப்பு!!

572

இத்தாலி – மிலானோ நகரிலுள்ள தொடர்மாடி வீடொன்றிலிருந்து இலங்கை இளைஞர் ஒருவர் வீழ்ந்து உயிரிழந்துள்ளார்.

இந்த சம்பவம் நேற்று முன்தினம் வெள்ளிக்கிழமை இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

மாரவில – முதுகட்டுவ பகுதியைச் சேர்ந்த 18 வயதான ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இவர் தவறி வீழ்ந்து உயிரிழந்துள்ளாரா? அல்லது இது கொலையாக இருக்கலாமா? என்ற இருவேறு கோணங்களில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை இத்தாலி பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

1 2