தொடர் மழையால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு!!

561

Malai

தொடர்ந்து பெய்துவரும் கடும் மழையால் நாட்டின் சில பகுதிகளைச் சேர்ந்த மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கபட்டுள்ளது.

கண்டி பகுதியில் தொடரும் சீரற்ற காலனிலை காரணமாக இரங்கல் நகரில் இருந்து கிரண்டியல்ல கீழ் பிரிவு தோட்டத்திற்கு செல்லும் பிரதான பாதையில் காணப்படும் பாலத்தின் ஒரு பகுதி உடைந்து வீழந்துள்ளது.

இதன் காரணமாக இந்த வீதியூடான வாகன போக்குவரத்து தடைப்பட்டுள்ளதது.

தொடரும் மழையுடனான காலனிலையால் பாலத்தின் ஏனைய பகுதிகளில் அதிக வெடிப்புகள் ஏற்பட்டுள்ளது.

இதேவேளை கிளிநொச்சி பகுதியில் உள்ள வீடுகளில் மழை நீர் தேங்கியுள்ளதால் மக்கள் சிரமத்திற்குள்ளாகியுள்ளனர்.

இதனால் ஆனந்தபுரம் கிழக்கு பகுதி மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.