வீதி வீதியாக அழைந்து உதவி செய்த இளையராஜா!!

451

ilayaraaja

தமிழ் சினிமாவின் கௌரவமாக நாம் நினைக்கும் ஒரு சிலரில் இளையராஜாவும் ஒருவர். இவர் கடந்த சில நாட்களாகவே மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களை நேரில் சந்தித்து நிதியுதவி மற்றும் ஆறுதல் கூறி வருகிறார்.

தற்போது இரண்டாவது நாளாக நேற்றும் சென்னையில் உள்ள பல தெருக்களுக்கு வீதி வீதியாக சென்று மக்கள் குறை கேட்டு அதை பூர்த்தி செய்து வருகிறார்.இந்நிலையில் 1 லட்சம் போர்வைகளை இளையராஜா வழங்கியுள்ளார். இதைக்கண்ட மக்கள் அனைவரும் அவரை மனதார பாராட்டியுள்ளனர்.