சவுதியில் பலியான யுவதி குறித்து முறையான விசாரணைகள் வேண்டும்!!

550

Saudi

சவுதி அரேபியாவுக்கு பணிப் பெண்ணாக சென்ற 18 வயதான யுவதி ஒருவர் உயிரிழந்தமை தொடர்பில் முறையான விசாரணைகளை மேற்கொள்ள வேண்டும் என, பெற்றோர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

குறித்த பெண்ணின் சடலம் அவரது சொந்த ஊரான அவிசாவளைக்கு எடுத்து வரப்பட்டுள்ளது.

இது தொடர்பில் அவரது பெற்றோர் கூறியதாவது, கடந்த மார்ச் 27ம் திகதி தனது மகள் தொலைபேசியில் பேசிய வேளை, மே மாதம் நாட்டுக்கு வருவதாக குறிப்பிட்டார்.

அதன் பின்னர் அழைப்பு ஏதும் வராத நிலையில், அவர் பணி புரிந்த வீட்டு உரிமையாளர்களிடம் இது குறித்து வினவியதாகவும் அவர்கள் கூறினர்.

எதுஎவ்வாறு இருப்பினும், அவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளதாக அவர்கள் குறிப்பிட்டதாகவும், பல மாதங்கள் கழித்தே சடலத்தை நாட்டுக்கு கொண்டு வர முடிந்ததாகவும் பெற்றோர் தெரிவித்துள்ளனர்.

எனினும் அவர் தற்கொலை செய்யுமளவுக்கு பிரச்சினை இருக்கவில்லை எனவும் பெற்றோர் குறிப்பிட்டுள்ளனர்.

இந்தநிலையில் சுமார் 3 வருடங்களுக்கு முன்னர் குறித்த யுவதி போலியான வயதைக் கூறியே வௌிநாடு சென்றுள்ளதாக தெரியவந்துள்ளது.