நொறுக்குத்தீனி போல் மிளகாய்களை சாப்பிடும் நபர்: கண்கலங்க வைக்கும் தகவல்…

514

chilli_eating_003.w540

சீனாவில் நபர் ஒருவர் மிளகாய்களை நொறுக்குத்தீனி போன்று சாப்பிட்டு வருவது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சீனாவில் ஸெங்ஸோவ் பகுதியை சேர்ந்த லி யங்ஸி(48) என்பவர் தனது தோட்டத்தில் 8 விதமாக மிளகாய் பழச்செடிகளை வளர்த்து வருகிறார். இவர் தினமும் 2.5 கிலோ மிளகாய்களை சாப்பிடுகிறார், இதனால் அப்பகுதி மக்கள் இவரை ‘சில்லி கிங்’ என்று அழைக்கின்றனர்.

இதுகுறித்து அவர் கூறியதாவது, காலையில் எழுந்து மிளகாய்ச் செடியை வைத்துதான் பல் துலக்குவேன். காலை முதல் இரவு வரை 2.5 கிலோ மிளகாய்களைச் சாப்பிட்டு விடுவேன்.சிறிய வயதில் இருந்தே எனக்கு இந்தப் பழக்கம் இருக்கிறது. உணவிலும் அதிக மிளகாய்களைச் சேர்த்துக்கொள்வேன்.

மிளகாய் இல்லாவிட்டால் சுவையே கிடையாது. உணவில் சேர்த்தது போக மீதி மிளகாய்களை, நொறுக்குத் தீனி போல போகும்போதும், வரும்போதும் சாப்பிடுவேன். மேலும் எனது உடலை,அடிக்கடி மருத்துவப் பரிசோதனை செய்துகொள்வேன். இவ்வாறு சாப்பிடுவதால் எனக்கு எவ்வித உடல் உபாதைகளும் ஏற்படவில்லை என்றும், ஆனால் எனக்குள் ஏதேனும் சக்தி இருக்கிறதா என்று தெரியவில்லை எனக் கூறியுள்ளார்.