நடைப்பாதை மீது தாறுமாறாக ஓடிய கார் : உடல் நசுங்கி பலியான நபர்!!

500

10112011316

சுவிட்சர்லாந்து நாட்டில் நடைப்பாதை மீது தாறுமாறாக ஓடிய கார் ஒன்று 42 வயதான நபர் மீது பயங்கரமாக மோதிய விபத்தில் அவர் உடல் நசுங்கி பலியான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சுவிஸின் சூரிச் மாகாணத்தில் உள்ள Fallandenstrasse என்ற பகுதியில் தான் இந்த கோர விபத்து நிகழ்ந்துள்ளது.நேற்று இரவு 9 மணியளவில், 42 வயதான நபர் ஒருவர் அங்குள்ள சாலையோர நடைப்பாதையில் நடந்து சென்றுள்ளார்.அப்போது எதிர் திசையில் இருந்து கார் ஒன்று Schwerzenbach என்ற நகரை நோக்கி வேகமாக சென்றுள்ளது.

நடைப்பாதையில் நடந்து சென்ற நபருக்கு அருகே வந்த கார் திடீரென கட்டுப்பாட்டை இழந்து நடைப்பாதை மீது தாறுமாறாக ஓடியுள்ளது.காரை கட்டுப்படுத்த முடியாத நிலையில், அங்கு நடந்து வந்துக்கொண்டு இருந்த நபர் மீது பயங்கரமாக மோதியுள்ளது. இந்த விபத்தில் நபரின் தலை காரில் சிக்கி நசுங்கியுள்ளது.

கண் இமைக்கும் நேரத்தில் நிகழ்ந்த இந்த விபத்தில் 42 வயதான நபர் சில நிமிடங்களிலேயே உயிரிழந்துள்ளார்.விபத்து குறித்து தகவல் அறிந்த பொலிசார் மற்றும் தீயணைப்பு வீரர்கள் அங்கு விரைந்து வந்துள்ளனர்.சாலையை தற்காலிகமாக மூடிய பொலிசார், சாலையில் கிடந்த சடலத்தை மருத்துவ பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். கட்டுப்பாட்டை இழந்த காரால் தான் விபத்து நடந்துள்ளதாக தெரிந்தாலும், இந்த சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் உடனடியாக பொலிசாரை தொடர்புகொள்ளுமாறு பொதுமக்களுக்கு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

மேலும், விபத்தை ஏற்படுத்திய 39 வயதான நபரிடம் பொலிசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.