
சென்னை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் திரையுலகினர் தொடர்ந்து நிவாரணப் பணிகளை மேற்கொண்டு வருகிறார்கள். இந்நிலையில் திருவள்ளூர் மாவட்டத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட 3 கிராமங்களை நடிகர் சூர்யா தத்தெடுத்துள்ளார்.
அவர் இது குறித்து தெரிவித்துள்ளதாவது: திருவள்ளூர் மாவட்டத்தில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள நெல்வாய், கச்சூர், கேரகம்பாக்கம் ஆகிய கிராமங்களை எமது அகரம் அறக்கட்டளை தத்தெடுக்கிறது. குறித்த இப்பகுதி வெள்ளத்தால் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது. அங்குள்ள மக்களிடம் எந்த ஒரு அடையாள அட்டையும் இல்லாததால் அவர்களால் அரசின் உதவிகளைப் பெறமுடியாது உள்ளது என்று தெரிவித்துள்ளார்.





