அலுமாரியிலிருந்து சிசுவின் சடலம் மீட்பு!!

433

newborn_baby_hand

கிளிநொச்சி – ஆனந்தபுரம் பகுதியிலுள்ள வீடொன்றின் அலுமாரியிலிருந்து சிசு ஒன்றின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். குறித்த பகுதியில் வசிக்கும் 23 வயதுடைய பெண் ஒருவர் யாருக்கும் தெரியாத நிலையில் குழந்தையை பிரசவித்து வீட்டு அலுமாரியில் மறைத்து வைத்துவிட்டு கடும் இரத்தப் போக்கு காரணமாக சிகிச்சைக்காக வைத்தியசாலைக்கு சென்றுள்ளார்.

வைத்தியசாலையில் குறித்த பெண் மீது ஏற்பட்ட சந்தேகம் காரணமாக வைத்தியர்கள் சம்பவம் குறித்து பொலிஸாருக்கு அறிவித்துள்ளனர். இந்நிலையில் பொலிஸார் சந்தேகத்தின் பேரில் குறித்த பெண்ணை கைது செய்துள்ளனர். பொலிஸார் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுவருகின்றனர்.