நோயாளிகளுடன் உற்சாகமாக திரைப்படம் பார்த்த கனேடிய பிரதமர்!!

467

tradue_eat_002

கனேடிய பிரதமரான ஜஸ்டின் ட்ரூடோ அந்நாட்டு மருத்தவமனையை சேர்ந்த 20 நோயாளிகளை அழைத்துச்சென்று புதிதாக வெளியாக உள்ள ஆங்கில திரைப்படத்தை உற்சாகமாக கண்டுகளித்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.பிரதமரான ஜஸ்டின் ட்ரூடோ சிறு வயது முதல் Star Wars படங்களை மிகவும் விரும்பி பார்த்து வருகிறார். தற்போது இந்த படத்தின் மற்றொரு படமான The Force Awakens என்ற திரைப்படத்தின் சிறப்பு காட்சி நேற்று முன் தினம் ஓண்டாரியோவில் உள்ள திரையரங்கில் காட்டப்பட்டுள்ளது.

இதற்கு முன்னதாகவே திட்டம் போட்டுருந்த கனேடிய பிரதமர், Children’s Hospital of Eastern Ontario என்ற மருத்துவமனையை சேர்ந்த 20 நோயாளிகளை அழைத்துக்கொண்டு படம் பார்க்க சென்றுள்ளார். திரைப்படம் முடிந்த பிறகு பேசிய நோயாளிகள், ‘பிரதமருடன் ஒன்றாக அமர்ந்து படம் பார்த்தது மறக்க முடியாது அனுபவம் என்றனர்.

’மருத்துவமனையை சேர்ந்த நண்பர்களுடன் படம் பார்த்தது மிகவும் உற்சாகமாகவும், சிலிர்ப்படைய வைக்கும் விதத்தில் இருந்ததாக’ பிரதமர் தனது டுவிட்டர் தளத்தில் கருத்து தெரிவித்துள்ளார். மேலும், நேற்று தொலைக்காட்சி ஒன்றிற்கு பேட்டி அளிக்கையில், எதிர்வரும் கிறிஸ்துமஸ் பண்டிகை அன்று எனது குழந்தைகளும் நிறைய பரிசுகளை எதிர்ப்பார்கள். அவர்கள் என்ன கேட்பார்கள் என்பதை கணிக்க முடியவில்லை என்றும், அவர்களுக்கும் Star Wars படங்கள் மிகவும் பிடிக்கும் என பேட்டி அளித்துள்ளார்.

இது மட்டுமல்லாமல், இந்த படத்தை ரசிகர்கள் அனைவரும் தவறாமல் பார்க்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளது.