வொக்ஸ்வேகன் நிறுவனத்தை இலங்கையில் ஸ்தாபிக்க நடவடிக்கை!!

1039

Volkswagen

வொக்ஸ்வேகன் நிறுவனம் இலங்கையில் ஸ்தாபிக்கப்படவுள்ளதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க பாராளுமன்றத்தில் நேற்று தெரிவித்துள்ளார்.

இந்த நிறுவனத்தின் தொழிற்சாலை குருநாகல் நகரில் ஸ்தாபிக்கப்படவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

2015ஆம் ஆண்டுக்கு முன்னரும் இந்த நிறுவனத்தை இலங்கையில் ஸ்தாபிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டிருந்ததாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க கூறினார்.