சமீரவின் பந்துவீச்சில் தடுமாறும் நியூஸிலாந்து அணி : இரு அணிகளும் வெற்றிக்காக கடும் போட்டி!!

428

Sameera

இலங்கையின் இளம்பந்து வீச்சாளரான துஸ்மந்த சமீர தனது அதிரடி பந்துவீச்சில் நியூஸிலாந்து அணியை அதிர வைத்துக்கொண்டிருக்கின்றார்.

இரண்டாவது டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்சில் 12.4 ஓவர்கள் பந்து வீசி 47 ஓட்டங்களுக்கு 5 விக்கட்டுக்களை எடுத்தார்.

இலங்கை தனது முதலாவது இன்னிங்ஸில் 292 ஓட்டங்களை பெற்றது. தனது முதலாவது இனிங்ஸை தொடர்ந்து நியூஸிலாந்து சமீரவின் பந்துவீச்சினால் சகல விக்கட்டுகளையும் இழந்து 237 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டது.

முதல் இன்னிங்ஸில் 55 ஓட்டங்கள் முன்னிலையில் இருந்த இலங்கை அணி 2வது இன்னிங்ஸில் சகல விக்கட்டுகளையும் இழந்து 133 ஓட்டங்களை மட்டுமே பெற்று கொண்டது.

வெற்றிபெற 189 ஓடங்கள் என்ற இலக்குடன் துடுப்பெடுத்தாடும் நியூஸிலாந்து அணி 3ம் நாள் ஆட்ட முடிவில் 147 ஓட்டங்களுக்கு 5 விக்கட்டுகளை இழந்து துடுப்பெடுத்தாடி வருகின்றது.

5 விக்கட்டுகள் கைவசமுள்ள நிலையில் நியூஸிலாந்து அணி வெற்றிபெற 47 ஓட்டங்கள் தேவை என்ற நிலையில் நாளை 4ம் நாள் ஆட்டம் விறுவிறுப்பாக அமையவுள்ளது.