
சர்வதேச டென்னிஸ் சம்மேளனம் (ஐ.டி.எப்.) ஒவ்வொரு ஆண்டும் டென்னிசில் சிறப்பாக செயல்படும் வீரர், வீராங்கனைகளுக்கு உலக டென்னிஸ் சாம்பியன் விருதுகளை வழங்கி வருகிறது. இந்த ஆண்டில் மகளிர் ஒற்றையரில் அமெரிக்க ‘நம்பர் ஒன்’ நட்சத்திரம் செரீனா வில்லியம்ஸ் உலக சாம்பியன் விருதுக்கு தெரிவாகியுள்ளார். இது இவருக்கு வழங்கப்படுவது 6வது முறையாகும்.
அதே போல் ஆடவர் ஒற்றையரில் இந்த சீசனில் 3 கிராண்ட்ஸ்லாம் பட்டத்தை வென்ற ‘நம்பர் ஒன்’ வீரர் நோவக் ஜோகோவிச் தொடர்ந்து 5வது முறையாக உலக சாம்பியன் விருதை பெறவுள்ளார். மேலும், மகளில் இரட்டையரில் ‘நம்பர் ஒன்’ கூட்டணியான இந்தியாவின் சானியா மிர்சா- சுவிட்சர்லாந்தின் மார்ட்டினா ங்கிஸ் ஜோடி இரட்டையர் உலக சாம்பியன் விருதை தட்டிச் சென்றுள்ளது. பாரீசில் நடக்கும் பிரெஞ்ச் ஓபன் டென்னிசின் போது இந்த ஐ.டி.எப்.உலக சாம்பியன் விருதுகள் வழங்கப்படும்.





