
நியூஸிலாந்தின் தற்போதைய தலைவர் பிரெண்டன் மெக்கலம் எதிர்வரும் பெப்ரவரி மாதம் அவுஸ்திரேலியாவுக்கு எதிராக நடைபெறவுள்ள டெஸ்ட் தொடருடன் விடைபெறவுள்ள நிலையில் அதற்குப் பின்னர் நியூஸிலாந்து அணியை வழிநடத்தும் பொறுப்பை கேன் வில்லியம்சன் பொறுப்பேற்கவுள்ளதாக தெரியவருகின்றது.
25 வயதாகும் வில்லியம்சன் 2010 ஆம் ஆண்டு டெஸ்ட் அரங்கில் அடியெடுத்து வைத்திருந்தார். ஐந்து ஆண்டுகளின் பின்னரே ஒருநாள் அரங்கில் அவர் பிரவேசித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.





