இலங்கை பாகிஸ்தானுக்கிடையில் 10 உடன்படிக்கைகள்!!

619

pakistan-sri-lanka-flags

பாகிஸ்தானின் பிரதமர் நவாஸ் ஷரீப் இலங்கைக்கான விஜயம் ஒன்றை மேற்கொள்ளவுள்ளார். அடுத்த வருடம் முதல் வாரமளவில் அவர் இலங்கைக்கு வருகை தரவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷரீப் உள்ளிட்ட குழுவினரின் இந்த விஜயத்தின் போது, ஜனாதிபதி மற்றும் பிரதமர் உள்ளிட்ட உயர் அதிகாரிகள் பலருடன் இரு தரப்பு பேச்சுவார்த்தைகளில் ஈடுபடவுள்ளனர்.

இதன்போது இருநாடுகளுக்கும் இடையில் 10 உடன்படிக்கைகளில் கைச்சாத்திடப்படவுள்ளதுடன், இதற்கான அனுமதியை அமைச்சரவை கடந்த வாரம் வழங்கி இருந்தது.