சமூக வலைதளங்களில் இன்று அதிகமாக செல்ஃபி வகை படங்கள் பதிவிடப்படுகின்றது. தொலைபேசி வாங்கும் போதே செல்ஃபி எடுக்க உகந்ததா என்று பரீசிலித்து பார்த்து வாங்கும் மனநிலையில் இன்று நாம் அனைவரும் இருக்கிறோம்.ஆனால் செல்ஃபி சில பக்கவிளைவுகளையும் உருவாக்கி இருக்கிறது.அமெரிக்காவின் ஜியார்ஜியா பல்கலைக்கழக தொழில்நுட்ப ஆராய்ச்சியாளர்கள் செல்ஃபி எடுப்பவர்களின் நோக்கம் குறித்த ஆய்வை சமீபத்தில் மேற்கொண்டனர்.
இதனை அடுத்து எதற்காக செல்ஃபி பயன்படுகிறது என்று ஆராய்ந்ததில், மனிதவள மேம்பாட்டாளர்களை பொறுத்தவரை இவை அதிகம் பயன்படுத்தப்படுகிறது. பொதுவாக வேலைக்காக ஆட்களைத் தேர்வு செய்யும் போது சமூக வலைதளங்களில் கொண்டிருக்கும் செல்ஃபிக்கள் மூலம் அவர்களது இயல்பை தெரிந்து கொள்ள முடிவதாக மனிதவள ஆய்வாளர்கள் கூறி உள்ளனர். ஆராய்ந்து பார்த்ததில் இப்படி செல்ஃபிக்களை அடிக்கடி பதிவேற்றும் மனிதர்கள் பலர், ஆளுமை மீது நம்பிக்கை கொள்ளாத – வெளித்தோற்றத்தின் மூலம் மட்டும் அனைத்தையும் எதிர்க்கொள்பவராக உள்ளனர்.
செல்ஃபி மீது ஆர்வம் கொண்டவர்கள் இயல்பாகவே கூட்டு முயற்சியில் ஈடுபாடு இல்லாதவராகவும் சுய கட்டுப்பாடு அற்றவர்களாகவும் இருக்கின்றனர்” என்றார்.மேலும், ஒருவேளை பணியில் இருந்துகொண்டே, செல்ஃபீக்களை எடுத்து பதிவேற்றம் செய்து கொண்டிருந்தால் நிச்சயம் அவர்கள் அந்த நிறுவனத்தின் மேல் அதிகாரியால் சந்தேகப் பார்வையோடு அணுகப்படுவார்கள் என்கிறது இந்த ஆய்வின் முடிவு.