கதிர்காமத்தில் பெருமளவான பக்தர்கள்; உணவு மற்றும் தங்குமிட வசதிகளில் தட்டுப்பாடு!!

682

kathirkamam

கதிர்காமத்திற்கு செல்லும் பக்தர்களின் எண்ணிக்கை வெகுவாக அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நேற்றைய தினம் கதிர்காமத்தின் வழிபாட்டு பிரதேசம் பெருமளவான பக்தர்களினால் நிரம்பி வழிந்ததாக தெரிவிக்கப்படுகிறது.

அதிகளவான பக்தர்கள் கதிர்காமம் நோக்கி சென்றிருப்பதனால் அவர்களுக்கான உணவு, குடிநீர் வசதிகள் மற்றும் தங்குமிட வசதிகள் போன்றவற்றில் தட்டுப்பாடு நிலவுவதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.கதிர்காமம் ஆலயத்தில் பூஜைகளை ஏற்றுக்கொள்ள விஷேட திட்டம் ஒன்று இடம்பெறுவதாக கதிர்காமம் பஸ்நாயக்க நிலமே டிபி குமாரகே தெரிவித்தார்.