இலங்கையில் தயாரிக்கப்பட்ட முதலாவது ஆளில்லா உளவு விமானம்!

1144

இலங்கையில் முதல் முறையாக ஆளில்லா உளவு விமானம் ஒன்று மொரட்டுவ பல்கலைக்கழக பொறியியல் பீடத்தினால் தயாரிக்கப்பட்டுள்ளது.

யூ.ஏ.வீ (UAV) என்ற பெயரிலான இந்த ஆளில்லா உளவு விமானத்தை மொரட்டுவ பல்கலைக்கழக பேராசிரியர் சுதத் ரோஹன முனசிங்கவும் பல்கலைக்கழக பொறியியல் பீடத்தைச் சேர்ந்த நான்கு மாணவர்களும், இணைந்து தயாரித்துள்ளனர்.

இந்த விமானம் 200 மீற்றர் உயரத்தில் பறந்து 12 நிமிட நேரத்திற்கு உளவுப் பணியில் ஈடுபட்டு தகவல்களை வழங்கக் கூடிய வகையில் இந்த விமானம் தயாரிக்கப்பட்டுள்ளது