இன்றைய காலகட்டத்தில் மக்கள் பெரும்பாலும் விரும்புவது Touch Screen லேப்டாப்களை தான்.இந்நிலையில் சாதாரண லேப்டாப்களை Touch Screen லேப்டாப்களாக மாற்ற சுவீடனை சார்ந்த நியோநோடு என்னும் நிறுவனம் புதிய கருவி ஒன்றை அறிமுகப்படுத்தியுள்ளது.
கண்ணுக்கு புலப்படாத ஒளிக்கதிர்களை ஸ்கிரீனின் மேற்பரப்பில் செலுத்தும் அந்த கருவி டச் வசதியை தருகிறது. இந்த கருவி மூலமாக போட்டோவை என்லார்ஜ் செய்யலாம்.
அதுமட்டுமின்றி கைவிரலால் படத்தை கூட வரையமுடியும், முதற்கட்டமாக 15.6 inch ஸ்கிரீன் லேப்டாப்களுக்கு மட்டுமே இந்த கருவி வெளிவருகிறது.2016-ம் ஆண்டு முதல் விற்பனைக்கு வரவுள்ள இந்த ‘ஏர் பார்’ கருவியின் விலை 49 அமெரிக்க டொலராகும்.