
தொலைபேசி ஊடாக நபரொருவரை மிரட்டி 30,000 ரூபாவை பெற்றுக் கொள்ள முற்பட்ட சம்பவம் தொடர்பில் பெண்ணொருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார். கொழும்பு குற்றப் புலனாய்வுப் பிரிவினருக்கு கிடைக்கப் பெற்ற முறைப்பாட்டின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் படியே இவர் கைதாகியுள்ளதாக தெரியவந்துள்ளது.
30 வயதான குறித்த பெண் மாளிகாவத்தை பகுதியைச் சேர்ந்தவர் என பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். மேலும் கைதான போது சந்தேகநபர் வசமிருந்து 30,550 ரூபாய் பணம் மற்றும் கையடக்கத் தொலைபேசிகள் ஆறும் கைப்பற்றப்பட்டுள்ளன. இவரை இன்று புதுக்கடை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. சம்பவம் குறித்த மேலதிக விசாரணைகளை கொழும்பு குற்றப் புலனாய்வுப் பிரிவினர் மேற்கொண்டு வருகின்றனர்.





