யாழில் மீன்பிடிக்கச் சென்ற இருவர் பலி!!

589

 
_50245900_bodyinwater304

பருத்தித்துறைக் கடற்பரப்பில் மீன் பிடிப்பதற்காகச் சென்ற போது, படகு கவிழ்ந்ததில் இரு மீனவர்கள் உயிரிழந்துள்ளனர். பருத்தித்துறைக் கடற்பரப்பில் மீன்பிடிப்பதற்காக படகு ஒன்றில் மூன்று மீனவர்கள் புறப்பட்டுச் சென்றுள்ளனர். கடும்காற்றுடன் கூடிய மழை கடற்கொந்தளிப்புக் காரணமாக இவர்களின் படகு கவிழ்ந்துள்ளது.

இதில் ஒருவர் கடல் அலையில் அடித்துச் செல்லப்பட்டார். ஒருவர் நீந்திக் கரை சேர்ந்தார். மற்றையவர் கடல் அலையில் அடித்துச் செல்லும் போது, சக மீனவர்களால் மீட்கப்பட்டு வைத்தியசாலைக்கு எடுத்துச் செல்லும் வழியில் உயிரிழந்துள்ளார். இதேவேளை நேற்று இடம்பெற்ற இந்த சம்பவத்தில், கடல் அலையால் அடித்துச் செல்லப்பட்டவரின் சடலத்தை தேடும் பணிகள் தொடர்கின்றன.

எஸ்.ஜோர்ஜ் (வயது 45), அந்தோனிமுத்து ஜெனிபட் (வயது 34) ஆகியோரே சம்பவத்தில் பலியாகியுள்ளனர்.