பாரிய கடல் கொந்தளிப்பு – மீன்பிடி நடவடிக்கைகள் பாதிப்பு!!

796

 
Petoskey-Winter-Storm

மட்டக்களப்பு மாவட்டத்தில் இன்று பாரிய கடல் கொந்தளிப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் மீனவர்கள் மீன்பிடிக்கச் செல்வதை முற்றாக தவிர்த்துள்ளனர். மீன்பிடி நடவடிக்கைகள் முழமையாக பாதிக்கப்பட்டுள்ளதுடன் மீனவர்கள்களின் அன்றாட வாழ்வாதாரமும் பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளது.

இம்மாவட்டத்தின் முக்கிய மீன்பிடி பிரதேசங்களான பூநொச்சிமுனை, புதியகாத்தான்குடி, ஏத்துக்கால், பாலமுனை, நாவலடி உட்பட பல இடங்களிலுள்ள கடலில் பாரியளவிலான கொந்தளிப்பு காணப்படுகின்றது.பாரிய அலைகள் கரையை நோக்கி வருதால் பேரிரைச்சலாக கடல் காணப்படுகின்றது. மீனவர்கள் தங்களது படகுகள் மற்றும் மீன்பிடி உபகரணங்களை கரையிலிருந்து நீணட தூரத்தில் இழுத்து கட்டியுள்ளனர்.

மீன்பிடி கலன்கள் கரையோரங்களில் பெருமளவில் காணப்படுவதுடன் கடற்கரை பிரதேசங்கள் வெறிச்சோடிக் காணப்படுகின்றன. அத்துடன் மீன்வாடிகள், மீன்விற்பனை கடைகள் என்பனவும் மூடப்பட்டுள்ளன.
இம்மாவட்டத்தில் சுமார் 28 ஆயிரம் குடும்பங்கள் மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.