
அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தை தாக்கிய சூறாவளிக்கு இதுவரையிலும் 8 பேர் உயிரிழந்துள்ளனர்.அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தை புதிய சூறாவளி புயல் தாக்கியது.அதுமட்டுமின்றி டெக்சாஸ் மற்றும் ஒக்லஹோமா மாகாணங்களில் 41 செ.மீ அளவுக்கு கடுமையாக பனிப்பொழிவு ஏற்பட்டுள்ளது.
இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது.
நேற்று பலமான காற்று வீசிய போது, கார் ஒன்று விபத்தில் சிக்கியது, இதிலிருந்து ஐந்து பேரும் பரிதாபமாக உயிரிழந்தனர்.
மேலும் அப்பகுதியிலிருந்த வீடுகள், தேவாலயங்கள் மற்றும் பிறகட்டிடங்கள் தரைமட்டமாகின.அமெரிக்காவில் இந்த வாரம் மட்டும் புயல் உள்ளிட்ட சம்பவங்களில் மட்டும் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையானது 26 ஆக உயர்ந்ததுள்ளது.





