
பிரான்சில் தனது மகன்களை கைது செய்ய முயற்சித்த பொலிசாரை தடுத்து நிறுத்திய தாயாரினை பொலிசார் தாக்கிய வீடியோ வெளியாகியுள்ளது.பிரான்சி Pantin பகுதியில் பொலிசார்கள் ஒரு வீட்டிற்குள் நுழைய முற்படுகின்றனர், அப்போது வாசலில் நின்றுகொண்ட தாயார் அவர்களை தடுத்து நிறுத்த முயற்சிக்கிறார்.
அப்போது பொலிசார் ஒருவர், தாயாரை ஒரு குத்துவிடுகிறார், இதனால் அவர் அதிர்ர்ச்சியடைகிறார், இந்த சம்பவத்தை அருகிலிருந்த குடியிருப்புவாசிகள் வீடியோ எடுத்து வெளியிட்டுள்ளனர்.
இந்த சம்பவம் குறித்து விளக்கம் அளித்துள்ள பொலிசார், அப்பெண்ணின் 15 மற்றும் 18 வயது மதிக்கத்தக்க இரு மகன்களும், அவர்களின் அடையாள அட்டையை சோதனை செய்யும் போது அவமதிக்கும் முறையில் நடந்துகொண்டதால், தற்காலிகமாக கைது செய்ய வந்தோம், ஆனால் அப்போது அவர்களின் தாயார் விழிப்புணர்வு இல்லாமல் நடந்துகொண்டார் எனக்கூறியுள்ளார்.
தற்போது காயமடைந்துள்ள அப்பெண் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார், இருப்பினும் உடலளவில் மேற்கொள்ளப்பட்ட ஆக்கிரமிப்பு காரணமாக பலவீனமடைந்துள்ள அப்பெண் உளவியல் ரீதியாகவும் பாதிக்கப்பட்டுள்ளார் என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில், அப்பெண், எனது மகன்களை கைது செய்ய வந்த பொலிசாரை பிடித்து தள்ளினேன், ஆனால் அவர்கள் எவ்வாறு இப்படி நடந்துகொள்ள முடியும் என்றும் இது ஒரு கொலைமுயற்சி என குற்றம்சாட்டியுள்ளார்.தற்போது அப்பெண்ணின் மகன்கள் இருவரையும் பொலிசார் விசாரணைக்கு உட்படுத்தியுள்ளனர்.





