கடல் கொந்தளிப்பைத் தாக்குப்பிடிக்க முடியாத நிலையில் அனலைதீவுக்கான அம்புலன்ஸ் படகு கடலில் கவிழ்ந்துள்ளது. குறிகாட்டுவானில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வேளையிலேயே இப்படகு கடலில் சரிந்துள்ளது.படகின் கட்டுமானப்பணிகள் உரியமுறையில் இடம்பெறவில்லையா? பழுதடைந்து பாவனைக்கு உதவாத ஒரு படகைத்தான் இவ்வாறு திருத்தியமைத்து அம்புலன்ஸ் படகாக மாற்றி சேவையில் ஈடுபடுத்தினார்களா- என பொது மக்கள் கேள்வி யெழுப்பியுள்ளனர்.
இதுவரை சேவையில் ஈடுபடுத்தப்படாத நிலையில், துறைமுகப்பகுதியில் காணப்பட்ட சிறிய அளவிலான கடல் கொந்தளிப்பையே தாக்குப் பிடிக்க முடியாமல் சரிந்து போன படகை நிமிர்த்தும் பணியில் நெடுந்தீவு ப.நோ.கூ.சங்கப் படகு ஈடுபட்டு வருகின்றது. வடக்கு மாகாண சபையின் 6 இலட்சம் ரூபா நிதி ஒதுக்கீட்டில் இப்படகு தயா-ரிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.