
இந்தியா -மற்றும் இலங்கை நாடுகளுக்கிடையே பாலம் அமைப்பதற்கு பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது என்று குமரியில் இந்திய மத்திய கனரக தொழில், பொதுத்துறை இணையமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
தனுஷ்கோடியிலிருந்து தலைமன்னாருக்கு ரூ.35 ஆயிரம் கோடி செலவில் பாலம் அமைக்க திட்டமிட்டுள்ளதாகவும், அவர் குறிப்பிட்டுள்ளார்.இதற்காக நிதி வழங்க ஆசிய அபிவிருத்தி வங்கி ஒப்புதல் அளித்துள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.





