
மனித நுகர்விற்கு தகுதியற்ற உணவுகளை விற்பனை செய்வதற்காக காட்சிப்படுத்திய புத்தளம் – பாலாவி பிரதேசத்தில் உள்ள வியாபாரிகள் முப்பது பேருக்கு எதிராக நீதி மன்றத்தில் வழக்கு தொடர, பொது சுகாதார பரிசோதகர்கள் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.
நேற்று பொது சுகாதார பரிசோதகர்களால் குறித்த பிரதேசத்தில் மேற்கொண்ட சுற்றிவளைப்பு தேடுதலின் போது, இந்த வியாபாரிகள் தொடர்பாக தகவல் வெளிவந்துள்ளது.தேடுதலின் போது 64கு இடங்கள் பரிசோதிக்கப்பட்டுள்ளது.





