
கோவையில் பெண் உதவி ஆய்வாளர் ஒருவர் தான் பணியாற்றி வந்த காவல்நிலையத்திலேயே தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.கோவை அன்னூரில் பணியாற்றி வந்த பெண் உதவி ஆய்வாளர் ஹேமலதா (46) தனது பிறந்த நாளன்று காவல்நிலையத்தில் தற்கொலைக்கு முயன்றுள்ளார்.
இதையடுத்து அவர் உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டும் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.தற்போது பொலிசார் அவரது தற்கொலை தொடர்பாக விசாரணை நடத்திவருகின்றனர்.ஹேமலதா நேற்று தன் கணவருடன் நீண்ட நேரம் பேசியுள்ளார். எனவே கணவருடன் பேசிய பின்னர் மன உளைச்சலில் தற்கொலை செய்திருக்கலாம் என சந்தேகம் எழுந்துள்ளது.குடும்ப பிரச்சனை காரணமாக அவர் தற்கொலை செய்து கொண்டாரா என்ற கோணத்தில் பொலிசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.





