பேருந்தில் இருந்து நடுவழியில் இறக்கி விடப்பட்ட இளம்பெண்: காரணம் என்ன?

524

teen_frogmarched_004

பிரித்தானியாவில் இளம்பெண் ஒருவரை பேருந்தில் இருந்து ஓட்டுனரால் நடுவழியில் இறக்கி விடப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.பிரித்தானியாவின் பர்மிங்ஹாம் பகுதியில் வசித்து வரும்15 வயது சஹ்ரா சாதிக் என்ற இளம்பெண் நண்பர்களுடன் திரையரங்கம் செல்ல பேருந்தில் ஏறியுள்ளார்.

அப்போது சஹ்ராவின் நண்பர்கள் சிறுமிகளுக்கான கட்டண சலுகை பயணச் சீட்டினை நடத்துனரிடம் காட்டியுள்ளனர்.ஆனால் சஹ்ரா தமது சீட்டை காட்டியபோது அதை பரிசோதித்த நடத்துனர், அவர் 16 வயது நிரம்பாதவர் என்பதை நம்ப மறுத்ததுடன்,பேருந்தில் இருந்து வலுக்கட்டாயமாக நடுவழியில் இறக்கி விடப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

நண்பர்களுடன் திரையரங்கம் செல்வதால் சஹ்ரா அதிக அலங்காரம் செய்துகொண்டதாகவும், அதனால் வயது அதிகமானவராக கருதப்பட்டதாகவும் கூறப்படுகிறது.இதனிடையே, சஹ்ரா சிறுமியர் பயணச் சீட்டை காட்டி ஏமாற்றியதாக கூறி 35 பவுண்ட் அபராதம் விதித்ததுடன்,கைகளை பின்னால் கட்டியவாறே நடந்து செல்ல வேண்டும் எனவும் கூறி 4 மைல் தூரம் நடக்க வைத்துள்ளனர்.

இச்சம்பவம் அவரை கடுமையாக பாதித்துள்ளதாக கூறும் உறவினர் ஒருவர், ஒரு குற்றவாளி போன்று சஹ்ராவை நடத்தியுள்ளனர் என்றார்.இதனிடையே பேருந்து நிர்வாகத்திடம் இதுகுறித்து முறையிட்டபோது, அவர்களின் பதில் முற்றிலும் முரணாதாக இருந்ததா கூறும் அந்த உறவினர்,வயதை உறுதி செய்யும் பொருட்டு கடவுச்சீட்டினை கொண்டு சென்றிருக்கலாம் என கூறியதாகவும் தெரிவித்துள்ளார்.