பம்பலபிடியில் ரயிலில் மோதி இருவர் பலி!!

495

Sri_Lanka_CountrysidetoNuwara_Eliya__0227_c3157e4ff84648bf9eceff7185975a06

பம்பலப்பிடி பிரதேசத்தில் ரயிலில் மோதி இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார். கொழும்பில் இருந்து மாத்தறை நோக்கி பயணித்த ரயிலிலேயே இவர் மோதுண்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

மேலும் சம்பவத்தில் வவுனியாவைச் சேர்ந்த 26 வயதான ஒருவரே பலியாகியுள்ளதாக, தெரியவந்துள்ளது. இதேவேளை, கொழும்பில் இருந்து கல்கிசை நோக்கி பயணித்த ரயிலில் மோதி மற்றுமொருவர் மரணமடைந்துள்ளார்.

பம்பலப்பிடி பகுதியிலேயே இந்த சம்பவமும் இடம்பெற்றுள்ளது. மேலும் இதன்போது நாவல – ராஜகிரிய பகுதியைச் சேர்ந்த 72 வயதான முதியவர் ஒருவரே உயிரிழந்துள்ளதாக பொலிஸார் கூறியுள்ளனர்.