முருங்கன் மெதடிஸ்த தேவாலயத்தில் நடைபெற்ற கிறிஸ்து பிறப்பு பாிசளிப்பு விழா2015!!

712

மேற்படி நிகழ்வானது வன்னி மாவட்ட கிறிஸ்தவ மத விவகாரங்களுக்கான இணைப்புச் செயலாளராகிய அருட்திரு கலாநிதி எஸ். சந்திரக்குமாா் அவா்களின் ஒருங்கிணைப்பில் நடைபெற்றது.

இவ்வைபவத்தின் பிரதம விருந்தினராக அமொிக்க தேசத்தில் இருந்து வருகை தந்த கௌரவ திரு.கித்சிறி அத்துலத்முதலி அவா்களும் அவருடைய குடும்பமும் கலந்து கொண்டமை சிறப்பம்சமாகும்.

மன்னாா்-முருங்கன் மெதடிஸ்த திருச்சபையின் போதகா் ரவி முருகுப்பிள்ளை அவா்களும் திருச்சபை நிா்வாகமும் சபை மக்களும் வழங்கிய சிறப்பான ஒத்துழைப்பின் மூலம் விழா சிறப்பாக நடைபெற்றது.

இந்த நிகழ்வில் கைத்தொழில் மற்றும் வணிக அமைச்சின் அமைச்சா் றிஷாட் பதியுதீன் அவா்களின் சகோதரராகிய வட மாகாணசபை உறுப்பினா் றிப்க்கான் பதியுதீன் கலந்து கொண்டாா்.

குழந்தைகளுக்கான பாிசில்கள் அனைத்தும் கித்சிறி அத்துலத்முதலி அவா்களினால் வழங்கி வைக்கப்பட்டமை இங்கே குறிப்பிடத்தக்க விடயமாகும்.

 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19