
புத்தள, குகுரம்பொல பிரதேசத்தில் இடம்இபற்ற வாகன விபத்தில் யுவதிகள் இருவர் உயிரிழந்துள்ளனர். பெல்வத்தையில் இருந்து குகுரம்பொல நோக்கி சென்ற மோட்டார் சைக்கிள் ஒன்று பாதையில் இருந்து விலகி மின்கம்பம் ஒன்றுடன் மோதியதில் இந்த விபத்து நிகழ்ந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
விபத்தில் படுகாயமடைந்த இருவரும் புத்தள வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளனர். அதே பிரதேசத்தில் வசிக்கக்கூடிய 20 மற்றும் 22 வயதுடைய யுவதிகள் இருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளனர். சம்பவம் தொடர்பில் புத்தள பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.





