
யுக்ரெயினில் இருந்து ரொமேனியாவுக்குள் பிரவேசிக்க முற்பட்ட நான்கு இலங்கையர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். ரொமேனிய எல்லைப்பாதுகாப்பு படையினரால், அவர்கள் கைது செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. யுக்ரெயின் – ரொமேனிய எல்லைப்பகுதியின் ஊடாக சட்டவிரோத அகதிகள், அதிகளவில் பிரவேசிப்பதன் காரணமாக அங்கு கண்காணிப்புகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
இந்த நிலையில், இலங்கையைச் சேர்ந்த நான்கு பேரும் அங்குள்ள ரிஸ்ஷா அருவியின் ஊடாக நாட்டுக்குள் பிரவேசிக்க முற்பட்ட போது கைது செய்யப்பட்டுள்ளனர்.அவர்கள் 21 முதல் 46 வயதுகளை உடையவர்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.





