மகிழ்ச்சியான தேசத்துக்காக அர்ப்பணிப்புடன் செயற்பட வேண்டும்!

470

1 (67)

சந்தோஷமாக வாழக் கூடிய நாட்டைக் கட்டியெழுப்ப அனைவரும் அர்ப்பணிப்புடன் செயற்பட வேண்டும் என, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். மக்களின் பிரச்சினைகளுக்குத் தேவையான தீர்வை விரைவாக பெற்றுக் கொடுக்க அரசாங்க ஊழியர்கள் நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இதனால் அரச ஊழியர்களுக்கு எந்தவொரு அழுத்தமும் இன்றி செயற்படும் சந்தர்ப்பம் அரசாங்கத்தால் வழங்கப்பட்டுள்ளதாகவும் ஜனாதிபதி இதன்போது மேலும் தெரிவித்துள்ளார். பொலன்னறுவையில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்ட போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.