
வெலிகம, பண்டாரமுல்லை பிரதேசத்தில் கூரிய ஆயுதங்களால் தாக்கப்பட்டு நபர் ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார். இரு தரப்பினரிடையே ஏற்பட்ட முறுகல் நிலை காரணமாக இக்கொலை நிகழ்ந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
தாக்குதலில் படுகாயமடைந்த நபர் மாத்தறை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் உயிரிழந்துள்ளார். அந்தப் பிரதேசத்தை சேர்ந்த 54 வயதுடைய ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், மற்றொரு சந்தேக நபரை வெலிகம பொலிஸர் தேடி வருகின்றனர்.





