வங்கியில் கொள்ளையடித்துவிட்டு ’புத்தாண்டு தின வாழ்த்துக்கள்’ தெரிவித்துவிட்டு சென்ற கொள்ளையர்கள்

1200

robbery-bid-foiled

ஆக்ராவில் உள்ள வங்கி ஒன்றில் ஆயுதங்களுடன் நுழைந்த கொள்ளையர்கள் 26 லட்ச ரூபாயை கொள்ளையடித்துவிட்டு, வங்கி ஊழியர்களுக்கு ’புத்தாண்டு தின வாழ்த்துக்கள்’ தெரிவித்துவிட்டு சென்றுள்ளனர்.புத்தாண்டு தொடங்கிய தினமான நேற்று ஆக்ராவில் உள்ள பாங்க் ஆஃப் இந்தியா வங்கியில் கொள்ளையர்கள் ஆயுதங்களுடன் நுழைந்துள்ளனர்.

பைக்கில் வந்த 6 பேரில், இருவர் வங்கியின் வெளிக் கதவை பூட்டிவிட்டு காவலுக்கு நின்றுள்ளனர். மீதமுள்ள நால்வர் வங்கியின் உள்ளே ஆயுதங்களுடன் நுழைந்துள்ளனர்.உணவு இடைவேளையின் போது கொள்ளையர்கள் நுழைந்ததால், அப்போது வங்கியில் சில ஊழியர்கள் மட்டுமே இருந்துள்ளனர்.

இந்நிலையில், கொள்ளையர்கள் காசாளரை மிரட்டி பணத்தை பெற்றுள்ளனர். மேலும் கொள்ளையடித்துவிட்டு அங்கிருந்த சிசிடிவி ரெக்கார்டரையும் அவர்கள் கைப்பற்றியுள்ளனர்.15 நிமிடத்திற்குள் இந்த கொள்ளை சம்பவம் நடந்து முடிந்ததாக கூறப்படும் நிலையில், கொள்ளையர்கள் வங்கியை விட்டு செல்லும் போது, வங்கி ஊழியர்களுக்கு ’புத்தாண்டு தின வாழ்த்துக்கள்’ தெரிவித்துள்ளனர்.

தற்போது இது தொடர்பாக பொலிசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.முதலில் வங்கி ஊழியர்கள், 53 லட்ச ரூபாயை கொள்ளையர்கள் எடுத்து சென்றதாக புகார் அளித்த நிலையில், பொலிசார் அந்த வங்கி கிளையை சோதனை செய்ததில், 27 லட்ச ரூபாய் பணம் வங்கியிலேயே வெவ்வேறு இடங்களில் கண்டுக்கப்பட்டுள்ளது.