
மட்டக்களப்பில் தொழிலாளி ஒருவர் மீது வீட்டுச் சுவர் இடிந்து விழுந்ததில் அவர் ஸ்தலத்திலேயே உயிரிழந்துள்ளார். ஏறாவூர் – காட்டுப்பள்ளி புதிய வீதியிலுள்ள பழைய வீடொன்றை இடித்து சுத்தப்படுத்தும் வேலையில் நேற்று காலையில் நான்கு தொழிலாளர்கள் ஈடுபட்டுள்ளனர்.
இதன்போது ஐயங்கேணியைச் சேர்ந்த எஸ்.சேகர் (வயது 52) என்பவர் மீது சுவர் சரிந்து விழுந்துள்ளது. அதனால் படுகாயமடைந்த அவர் சம்பவ இடத்திலேயே பலியாகியுள்ளார். சடலம் தற்போது, பிரேத பரிசோதனைக்காக ஏறாவூர் ஆதார வைத்தியசாலைக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளது.





