
மார்பக புற்றுநோயால் மரணத்தின் விளிம்பில் உள்ள பெண்ணிடம் ‘என்னை திருமணம் செய்துக்கொள்வாயா?’ என காதலை வெளிப்படுத்திய நபரின் செயல் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஓண்டாரியோ மாகாணத்தில் உள்ள நியூமார்கெட் என்ற பகுதியில் ஹெய்டி மூர் (29) என்ற பெண்ணும் ரோட்னி கோமர் (33) என்ற நபரும் தனித்தனி வீடுகளில் வசித்து வருகின்றனர்.
இருவரும் பள்ளி காலத்தில் இருந்து நண்பர்களாக இருந்தாலும், 2 வருடங்களுக்கு முன்னர் தான் மீண்டும் சந்தித்து நட்பாக பழகி வருகின்றனர்.ஆனால், ஹெய்டிக்கு கடந்த 2010ம் ஆண்டு மார்பக புற்றுநோய் இருப்பதை தெரிந்துக்கொண்ட ரோட்னி மிகவும் மனம் உடைந்துள்ளார்.
பல்வேறு சிகிச்சைகளை மேற்கொண்டதன் காரணமாக புற்றுநோய் குணமாகிவிட்டதாக ஹெய்டி மகிழ்ச்சியில் திளைத்துள்ளார்.ஆனால், 2014ம் ஆண்டு எடுக்கப்பட்ட ஒரு மருத்துவ பரிசோதனையில் அவரது கல்லீரலில் 10 செ.மீ அளவிற்கு புற்றுநோய் கட்டி வளர்வதை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார்.இது மட்டுமில்லாமல், அந்த புற்றுநோயானாது அவரது நுரையீரலை வரை தற்போது பரவியுள்ளதால், இதனை குணப்படுத்த முடியாது என ஹெய்டிக்கு சந்தேகம் எழுந்துள்ளது.





